Wednesday, 13 January 2016

கனவு மெய்பட வேண்டும்..


வரம் வேண்டும்,
          விதைத்த உடன் முளைத்துவிட
          வரம் வேண்டும்,
அநீதியை ஒழித்து விட
ஆயுதம் வேண்டும்,
          இரு தரம் மக்களை ஒன்றாக்க
          தராசு வேண்டும்,
ஒழுக்கமுள்ள மனிதர்களை உருவாக்க
ஒரு கருவி வேண்டும்,
         உணவில்லா மனிதர்களுக்கு
         உணவாக நான் வேண்டும்,
தண்ணீர் கிடைக்கா நாடுகளில்
நல்ல கிணறாக நான் வேண்டும்,
         யுத்தமில்லா பரணி வேண்டும்
         அதில் சகோதரத்துவம் வேண்டும்,
பண்டம் மாற்றும் முறை மீண்டும்
பழக்கத்தில் வர வேண்டும்,
          பணத்தாசை மனிதனைவிட்டு
          ஒழியவேண்டும்,
அரசியல், அதிகாரம்,  அனுகுமுறை இவை
சீர்திருதத்ப்படவேண்டும்,
           எங்கும் எதிலும்
           உன்மை வேண்டும்,
கல்வி, மருத்துவம், மரியாதை
அனைவருக்கும் சமமாக வேண்டும்,
           தன்னை போல் மற்றவனை தானும்
           நினைக்க வேண்டும்,
உயிருக்க், உடமைக்கு, உணர்வுக்கு
உத்திரவாதம் வேண்டும்,
           சாதிகள், சாதிக்கட்சிகள் என்றும்
           தேசதுரோகமாக காண வேண்டும்,
கொச்சையில்லா காதல் வேண்டும்
அச்சமில்லா வாழக்கை  வேண்டும்,
           துச்சமான தீயவர்களை உலகம் என்றும்
           புச்சமாக காண வேண்டும்,
மனிதன் என்றும் நல்லவற்றை
நாட வேண்டும்,
           உலகம் நன்மையில்
           மூழ்க வேண்டும்,
(விட்டு) கொடுத்து வாழ பழக வேண்டும்
உயிர் உடல் விட்டு போகும் நினைவு வேண்டும்,
           நல்லதே கனவு காண வேண்டும்
          இந்த கனவுகள் மெய்பட வேண்டும்,
அதற்க்கு உன் வரம் வேண்டும்....
                              வரம் வேண்டும்.....



                              --இது என் நண்பர்களுக்கு சமர்ப்பணம்...

No comments:

Post a Comment